வகைப்படுத்தப்படாத

‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – ‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நாவலர் நற்பணிமன்றத் தலைவர் ந.கருணை ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (22) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி விருது 2017ல் விருது பெற்றவர்களான பேராசிரியர் சி.பத்மநாதன் – ஸ்ரீலங்கா சிகாமணி விருது , பேராசிரியர் சோ. சந்திரசேகரன் – வித்தியா நிதி விருது ,எஸ். தில்லை நடராஜா – கலாகீர்த்தி விருது , தெ. ஈஸ்வரன் – தேசபந்து விருது ,ரெ. மூக்கையா- வித்தியா நிதி விருதினையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் , கொழும்பு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், நாவலர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

Buddhasasana Minister blames Ranjan Ramanayake

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

ரயிலுடன் பாடசாலை வாகனம் மோதி பாரிய விபத்து;