சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க மறுக்கும் மோடி?

(UTV|COLOMBO)-நேபாளத்தில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டின் போது, இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான தனிப்பட்ட விசேட சந்திப்பு நடைபெறுவது தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளும் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, குறித்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலோன் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில், எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளில்
பிம்​ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரச​ தலைவர்கள் கலந்துக்கொள்ளும் உச்சி மாநாடு நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி