சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று கொழும்பில்

(UTV|COLOMBO)-2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பான திட்ட அறிக்கை இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதிக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக திரு.செனவிரட்ன தெரிவித்தார். இந்த அறிக்கையை நொபெல் பரிசை பெற்ற பேராசிரியர் மொஹான் முனசிங்ஹ தலைமையிலான குழு தயாரித்துள்ளது. தேசிய நிலைபேறான அபிவிருத்தி குழுவின் தலைவராக திரு.உதய ஆர் செனவிரட்ன செயற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த திட்ட அறிக்கை குறித்து திரு.செனவிரட்ன விளக்கம் அளித்தார். இந்த அறிக்கையில் சமூக பொருளாதாரஇ சுற்றாடல் மற்றும் இதர விடயங்கள் குறித்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தலைமையிலான பாராளுமன்ற குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் மொஹான் முனசிங்ஹவும் கலந்து கொண்டிருந்தார்.

இன்று நடைபெறும் திட்ட அறிக்கையைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நேவி சம்பத் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில்

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…