உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிறுவனமொன்றுக்கு திடீர் விஜயம்

(UTV | கொழும்பு) –  இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்களை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நேரடியாக ஆராய்வதற்காக இலங்கை நிலையான சக்தி அதிகார சபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“செழிப்பு பார்வை” கொள்கையின்படி, 2030 இற்குள் மொத்த மின் உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வது இந்த விஜயத்தின் மற்றொரு நோக்கமாகும்.

Related posts

ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

மேலும் ஐந்து பேர் விடுதலை

கிஹான் பிலபிட்டிய கைது செய்யப்படுவதை தடுக்க ரிட் மனு தாக்கல்