வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி, அமைச்சர் வஜிர அபேயவர்த்ன, அவரது செயலாளர் பி.பீ.அபேயகோன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தேவையான நிதியை, நிதியமைச்சில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் அனர்த்தத்திற்குள்ளான மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்துவருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திடீர் என ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு நாடு திரும்புகின்றார்.

 

 

Related posts

ரோஹிதவிற்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் புதிய சட்டம்

அமெரிக்காவில் கடும் வெப்பம்