சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு

(UTV|COLOMBO) 2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் ஆயிரத்து 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் இறுதி தினம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்காக காவற்துறை ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…