உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம்

(UTV|கொழும்பு)- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 711 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் 146 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

சாட்சி பதிவிற்காக இன்றும் 03 பேர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!

தனிமைப்படுத்தல் – வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்