உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்று(06) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்காமையினால் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாக கருதியே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

அலி ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிப்பதற்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள்.கே. வீரசிங்கவுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் போராட்டம்

editor

சமூக ஊடகங்களின் பயன்பாடு – சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

editor