வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விபரங்கள், உரிய நடவடிக்கைகளுக்காக விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு பதில் வழங்கும் போது பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.

குறித்த ஆணைக்குழுவுக்கு 15 ஆயிரத்து 599 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஆயிரத்து 180 முறைப்பாடுகள் அடிப்படை அற்றவை என்பதால், அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Related posts

கனடாவில் காரை நிறுத்துவதில் தகராறு…

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…

இஸ்ரேலின் வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி!