உள்நாடு

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி இன்று(18) காலை பயணமானாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளதுடன், நாடு கடந்து, சர்வதேச கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விஜயத்தின்போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய எண்ணெயை கடன் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

editor

ரணிலை பதில் ஜனாதிபதியாக நியமித்து ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி