அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் அதிரடியால் ஓய்வூதியத்தை இழந்த 85 முன்னாள் எம்பிக்கள்

குறித்த காலத்துக்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பி.க்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்களும் அடங்குகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 45,000 ரூபாவாகும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டது.

கடந்த (24) ஆம் திகதி நள்ளிரவுடன் 9 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

உரத்திற்கான புதிய விலை

ஜனாதிபதியின் மீலாத் தின செய்தி