சூடான செய்திகள் 1வணிகம்

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது.

நாட்டின் சோள உற்பத்திக்கு சமீபகாலத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் பிரச்சினைகளும் ஏற்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வறட்சி வலயங்களின் சிறியளவில் சோள உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோரும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்தனர். இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

நீர் பற்றாக்குறை விதை மற்றும் விவசாய இரசாயனப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு உற்பத்திக்கான கடனை திருப்பி செலுத்துவது ஏற்பட்ட சிரமங்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதைப்போன்று ஏனைய வன ஜீவராசிகளினால் உற்பத்திக்கு ஏற்படும் பாதிப்பு கிருமிநாசினிகள் காணி உரிமை தொடர்பிலான பிரச்சினைகள் உள்ளிட்டவை சோள உற்பத்தியில் உள்ள பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைபோன்று உற்பத்தியின் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது