உள்நாடு

சோற்றுப்பொதி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை 10% குறைப்பு

(UTV | கொழும்பு) –   நாளை முதல் சோற்றுப் பொதி மற்றும் ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை 10 வீதத்தால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவு மற்றும் கோழிக்கறி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைவடைந்ததை அடுத்து இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சலுகை விலையில் சந்தையில் போதுமான உணவு இருப்புக்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அசேல சம்பத் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதையடுத்து, ரொட்டி மற்றும் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளையும் திருத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதிநிதிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா

சாந்த பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்