கேளிக்கை

சொகுசு பங்களாவை பொலித்தீன்களால் மூடிய பொலிவுட் ஸ்டார்

(UTV|கொழும்பு) – பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மும்பையில் உள்ள தனது சொகுசு பங்களாவை மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மூடியுள்ளார்.

இவ்வாறு தனது பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் ஷாருக்கான் கொரோனாவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் பெய்யும் அதிகமான மழையிலிருந்தும், பலத்த காற்றிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே வீட்டின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மூடியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் ஷாருக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

India Tv - shah rukh khan mannat viral photos

Related posts

கர்ப்பமானதாக வெளியான தகவல் – இலியானா

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?

சர்கார் படத்தின் எச்.டி இன்றே வெளியாகும்?