உள்நாடு

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட 30 சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த பெறுமதி 90,000 ரூபா என தெரிய வந்துள்ளது.

மேற்படி சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!