விளையாட்டு

செரீனாவுக்கு அதிர்ச்சி தோல்வி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-1 என லீட் கொடுத்த செரீனா அதற்கடுத்த இரண்டு செட்களையும் 3-6, 3-6 என இழந்து தொடரை விட்டே வெளியேறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய செரீனா இந்த முறை அரையிறுதியோடு சென்றுள்ளார்.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாட உள்ளார் விக்டோரியா அசரங்கா.

Related posts

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

ஐ.சி.சியின் புதிய அதிரடி விதிமுறைகள் விரைவில்

வீட்டினுள்ளே பயிற்சி – ரோஹித் கருத்து