அரசியல்உள்நாடு

செயற்பட முடியாவிட்டால் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் அரசியலமைப்பில் பொருந்தக்கூடிய விதிகளுக்குள் இல்லையென நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி சஜித் கூறினார்.

ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் இன்னும் ஜனாதிபதியாக இருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது.

அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

Related posts

வானிலை முன்னறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது