விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

(UTV | கொழும்பு) –  சென்னைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.

19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ஓட்டங்கள் 28 பந்துகளை சந்தித்த டோனி 22 ஓட்டங்களே எடுத்தனர்

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.

இறுதியில், 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இல்லை

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா? சர்ப்ராஸ் கருத்து

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி