கேளிக்கை

சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்

(UTV | இந்தியா) – நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.

சூர்யாவின் அந்த அறிக்கை பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் முதல் திரையுலகினர் வரை பலர் சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவினர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா, அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருகிறார்.

முழு விவரங்கள் தெரியாமல் இதுபோன்று பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று ராதாரவி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பிரபல நடிகருக்கு நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் அமலா

மேலும் ஒரு பிரபல நடிகைக்கு கொரோனா