கேளிக்கை

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்

(UTV|INDIA)-ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கேங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

சார்மி எடுத்த அதிரடி முடிவு…

அரசியல்வாதியாக சூர்யா?

தமிழ் சினிமாவின் உச்சகட்ட பீக்கில் தளபதி