சூடான செய்திகள் 1

சூரியன் இலங்கைக்கு நேரடி உச்சம்…

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தொட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக உச்சங் கொடுக்கும்.
அதற்கமைய இன்று நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளில் 42 செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் நிழலான இடங்களில் வசிக்குமாறும், மேலும் அதிக நீராகாரத்தை புசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்…

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor