உலகம்

சூடானில் 27 பாதுகாப்பு படையினருக்கு மரண தண்டனை

(UTVNEWS | AFRICA) –அல் காஹிர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் மீது தொடரப்பட்ட வழக்க விசாரணை நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் அதிகம் சாப்பிடக்கூடிய ரொட்டி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை எட்டியது.

அந்த நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த உமர் அல் பஷீரை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் அதிகரித்தன.

குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அல் காஹிர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டிருந்தது.

Related posts

மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

editor