வகைப்படுத்தப்படாத

சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 1 (நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிது

இஞ்சி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை – 2 இன்ச்

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!!!

 

 

 

 

Related posts

US brings in new fast-track deportation rule

Former Defence Secretary, IGP admitted to hospital

Sudan junta and civilians sign power-sharing deal