உலகம்

சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் காயம்

சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், ஆபத்து இன்னும் குறையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

Related posts

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி