வகைப்படுத்தப்படாத

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் பலர் காயம்

(UTV|SWITZERLAND)-சுவிட்ஸர்லாந்தில் இலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்ஸர்லாந்தின், சூரிச் நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 40 சுற்றுலாப் பயணிகள் பஸ்ஸில் இருந்துள்ளதுடன், 12 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வடமாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

Premier to testify before PSC on Aug. 06

விரைவில் மரணத்தை சந்திக்க போகிறேன்:முன்னாள் போப் பெனடிக்ட்