வகைப்படுத்தப்படாத

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது பிறந்ததின நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது பிறந்த தினத்தனை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் காலை 8 மணிக்கு மட்டக்களப்பு நகர மத்தியிலிருந்து பாடசாலை மாணவர்களின் ஊர்வலம் மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவிலுள்ள விபுலாநந்தரின் சிலையருகே வந்தடைந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் ஆசியுரையினை கல்லடி ராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தா ஜீ மகராஜ் வழங்கினார்.

விபுலாநந்தரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தல், விபுலாநந்தம் சிறுப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

மேலும், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் கல்லடியிலுள்ள சமாதியில் மலரஞ்சலி நிகழ்வும், மர நடுகையும் இடம்பெற்றது.

அத்துடன், கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்திலும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளருமான கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Momoa leads Netflix’s “Sweet Girl” film

Bambalapitiya Hit-and-Run: AG files indictments against driver

Efficiency important to alleviate poverty