உள்நாடு

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

(UTV|கொழும்பு) -உள்நாட்டினுள் யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்கள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த ஆலோசனைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் இருந்து மேலும் 143 மாணவர்கள் நாடு திரும்பினர்

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி