உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு

(UTV | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைப் பதிவு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு ஆகியவை செப்டம்பர் 1ஆம் வாரத்தில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான கூடுதல் ஒதுக்கீட்டிற்கு சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

Related posts

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

தமது பதவியை இராஜினாமா செய்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள்!