உள்நாடு

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு அண்மையில் தீர்மானித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று(07) நடைபெறவுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள பதினொரு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

பத்து பேருக்கு பிடியாணை