விளையாட்டு

சுய தனிமைப்படுத்தப்பட்டார் கங்குலி

(UTV|இந்தியா) – இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவருமான சவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கங்குலியின் மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான ஸ்னேகாசிஷ், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஸ்னேகாசிஷ், கங்குலியின் வீட்டுக்கு வந்து அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஸ்னேகாசிஷ்-க்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார நெறிமுறைகளின்படி, சவுரவ் கங்குலி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி

டி20 உலகக் கிண்ணம் : 3 விக்கெட் வித்தியாசத்தில் UAE வீழ்ந்தது

இலங்கை அணியை துவம்சம் செய்வது இங்கிலாந்து அணி