உலகம்

சுமார் 85 நாடுகளில் ‘டெல்டா’

(UTV | ஜெனீவா) – உலகம் முழுவதும் பரவி வரும் டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறும்போது,

“டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது.

டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கொரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.

மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

Related posts

ஆஸியில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு

உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ்

பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா?