கிசு கிசு

சுமார் 15 மணி நேர மின்வெட்டு?

(UTV | கொழும்பு) –  நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எரிபொருளை இறக்குமதி செய்ய பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என அந்த வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான மின்வெட்டு நாட்டிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் என மின்சார சபையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியைத் தொடங்கவில்லை என்றால், ஏப்ரலுக்குப் பிந்தைய பருவத்தில் எந்த நிலக்கரி கப்பலையும் இறக்குமதி செய்ய வாய்ப்பில்லை.

எனவே, அடுத்த சில வாரங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியை தொடங்க வேண்டும், இல்லையெனில், மக்கள் பல நாட்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உணவில் மனித பல்?- 75 அமெரிக்க டொலர் இலவச கூப்பன்

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!

15 லட்சம் வீடியோக்களை நீக்கியது facebook…