கிசு கிசு

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவிற்கு எதிர்ப்பு

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுவதற்காக வருகைதருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் அனில் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, சந்திரிகா குமாரதுங்கவிற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா கண்டறிய Self Shield

யானைச் சவாரிக்கு ருவான் முழு ஆயத்தம்