உள்நாடு

சுதந்திர தினத்தினை முன்னிட்டு விசேட போக்குவரத்து

(UTV | கொழும்பு) – இன்று முதல் பெப்ரவரி 04ம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒத்திகை நாட்களில் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், சுதந்திர தினத்தன்று அதிகாலை 04.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒத்திகைகளின் நிமித்தம், தாமரைத் தடாகத்திற்கு அருகே உள்ள வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது.

இதன்படி, இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கெசல்வத்த தினுக துபாயில் உயிரிழப்பு

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

தப்பிச் சென்ற கொரொனா நோயாளி சிக்கினார்