உள்நாடு

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”

‘தாய்மை’ மதிக்கப்பட வேண்டும் – ஹிருணிகாவின் புகைப்படங்களை பகிர வேண்டாம்

தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை