புகைப்படங்கள்

சுகாதார நடைமுறையில் மாணவர்கள்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று(06) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், மாணவர்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

     

     

     

     

Related posts

சம்பூரில் 50க்கும் மேற்பட்ட சிறிய வகை திமிங்கிலங்கள் கரையொதுங்க முயற்சிப்பு

UAE யினால் தயாரிக்கப்பட்ட முதல்செயற்கைக்கோள் தென் கொரியாவுக்கு வழங்கப்பட்டது

Diamond Princess கப்பல் ஜப்பானில் இருந்து வெளியேறியது