உள்நாடு

சுகாதார அமைச்சு செவிசாய்க்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும்

(UTV | கொழும்பு) – பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாவிடின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

பணிப்புறக்கணிப்பு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நாளை தீர்மானிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார நிபுணர்கள் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

‘நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றுதான் இனவாதம்’