உள்நாடு

சுகாதார அமைச்சிற்கு முன்னால் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – சுகாதாரப் பணியாளர்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர்கள் உள்ளிட்ட 16 சுகாதார சேவைகயைச் சேர்ந்த தொழிற் சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

சுகாதார அமைச்சிற்கு எதிரில் இன்று நண்பகல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 24ஆம் திகதி இரண்டு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த நேரிடும் என ஒன்றியத்தின் மற்றுமொரு இணை அழைப்பாளரான சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது – சஜித் பிரேமதாச

editor

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor