உள்நாடு

சீரற்ற வானிலை – 12 பேர் பலி – 17 பேர் காயம் – 2 பேரை காணவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

21 மாவட்டங்களின் 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 98,635 குடும்பங்களைச் சேர்ந்த 330,894 பேர் சீரற்ற காலநிலையினால் இன்று (28) காலை வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

82 வீடுகள் முழுமையாகவும் 1,465 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

267 பாதுகாப்பான இடங்களில் 8,358 குடும்பங்களைச் சேர்ந்த 26,625 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்