வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் 39 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன்,  பலாவெல, பாரவத்த மற்றும் கலவானை முதலான தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட 14 பாடசாலைகள் நாளை 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

තැපැල් වර්ජනය තවදුරටත්

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?

කැලිෆෝනියාවට තවත් භූ කම්පනයක්