உள்நாடுவணிகம்

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO) – சீமெந்துக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உள்ளுர் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதி ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபாவாகும்.

சீமெந்து தூளாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் பொதியிடப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதியின் அதிகூடிய சில்லறை விலை 950 ரூபாவாகும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Capture cement

Related posts

ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு

ரணில் விக்கிரமசிங்க : பாராளுமன்ற உறுப்பினரானார்

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor