உலகம்

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்

(UTV | சீனா) –  உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள், கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் கிழக்கே ஷான்டாங் மற்றும் ஹெனான் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதாகவும், இன்று (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

‘லாங்யா’ என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ். மேலும் இந்த வைரஸுக்கு மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக காய்ச்சல், சோர்வு, இருமல், உணவின் மீது வெறுப்பு, தசைவலி, உடல்நலக்குறைவு, வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். மேலும் உடலில் ரத்த தட்டுக்கள் குறையும். இந்த வைரஸ் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் திறன் கொண்டது என்று அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.

Related posts

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி

கிம் ஜாங் இனது சகோதரியும் மாயம்