உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) –

சீனாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் நேற்று(30) நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்சரேகைக்கு 41.15° வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67° கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.

பூமிக்குக் கீழே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இம்ரான் கானுக்கு பிணை!

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

‘ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை’ : இளவரசர் ஹாரி