உலகம்வணிகம்

சீனாவிற்கு கடும் பொருளாதாரம் சரிவு

(UTVNEWS | CHINA) –உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனா 2019ஆம் ஆண்டில் 6.1வீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.

இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதாவது 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சி இவ்வளவு குறைவாக 2019இல் தான் ஏற்பட்டுள்ளது என சீன அரசத் தரப்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.1 டிரில்லியன் டாலரிலிருந்து 14.38 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என என்பிஎஸ் தெரிவித்துள்ளது.

2017 இல் சீனாவின் பொருளாதார வளா்ச்சி 6.8சதவீதமாக இருந்த நிலையில், அமெரிக்கவுடனான வா்த்தகப் போா் காரணமாக2018 இல் 6.6 சதவீதமாக சரிந்தது.

உள்நாட்டுத் தேவையில் மந்தம், அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் இந்த சரிவுக்குக் காரணம் என தேசிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகப் பொருளாதரமும் வர்த்தகமுமே மந்தமுகம் காட்டியுள்ளது என்பதை தாம் மறந்துவிடவில்லை என புள்ளியியல் திணைக்களத் தலைவர் நிங் ஜிஷே தெரிவித்துள்ளார்.

Related posts

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

கொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்