உள்நாடு

சீனா தடுப்பூசிக்கு முன்னுரிமை பெறுவோர் சீனர்களே

(UTV | கொழும்பு) –  சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி, தொற்று நோய் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நிபுணத்துவ குழுவின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களுக்கு குறித்த தடுப்பூசியினை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 70 லட்சம் ஸ்புட்னிக் 5 கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனத்திற்கும் ரஷ்யாவின் கெமிலியா நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 9 லட்சத்து 19 ஆயிரத்து 753 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தொழில் திணைக்களத்தினை ஒத்த இணையத்தளம் மூலமாக மோசடி

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) இல்லை

editor