உள்நாடு

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்

(UTV | கொழும்பு) –  சீன விண்வெளி ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை இதுவரை அனுமதி கோரவில்லை என ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடு சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அந்த துறைமுகத்தில் கப்பல்களை இயக்குவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு முழு அதிகாரமும் உரிமையும் உள்ளதுடன், குறித்த சீனக் கப்பல் நாட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் அதனைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் தொண்ணூறு கிழக்கு மலைத்தொடரை அண்மித்து பயணிப்பதாக செய்மதி தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

இன்று 5 மணி நேர மின்வெட்டு