உள்நாடு

சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது

(UTV | கொழும்பு) – சீனத் தயாரிக்கப்பட்ட “சினோபார்ம்” கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கையில் செலுத்தப்படும் போது அதில் இலங்கையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை , நாட்டில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சீனத் தூதரகம் கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்

இதேவேளை எத்தனை சீன பணியாளர்கள் தடுப்பூசிகளைப் பெறுவார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு 6 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசி குப்பிகளை வழங்க சீனா இணங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்