சூடான செய்திகள் 1

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

(UTV|COLOMBO)-சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற யாத்ரீகர்கள் மீது கற்கள் புரண்டதனால், இருவர் படுகாயமடைந்து டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் கணேமுல்ல பகுதிகளை சேர்ந்த 26, 27 வயதான ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் ‘மஹாகிரிதம்ப’ எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் புரண்டுள்ளது.

இதனையடுத்து, கற்களுக்குள் சிக்கிய இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களை உடனடியாக யாத்திரைக்கு சென்ற சிலர் நல்லதண்ணி பிரதேசத்திற்கு தூக்கிச்சென்றுள்ளனர்.

பின்னர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

 

 

 

 

Related posts

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

UPDATE-நாமல் குமார மற்றும் நாலக்கடி சில்வாவெளிநாடு செல்லத் தடை

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்