வகைப்படுத்தப்படாத

சிலியில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

மியன்மார் தொடர்பில் அமெரிக்காவின் வலுயுறுத்தல்

1 killed as police clash with ‘Awa’ group members in Manipai