உள்நாடு

‘சிலருக்கு போக வேண்டாம் என வணங்காத குறையாக கூறினோம்’

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட சிலரை கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் சிலர் கூறாமல் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“நான் தொடர்ந்து இங்கு வந்த 30 ஆண்டுகளில், இவ்வாறு குழப்பமடைந்த பாராளுமன்றத்தை பார்த்ததில்லை. இப்போது இந்த 225 இல் 10-12 குழுக்கள் உள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை எடுத்தால் ஐந்தாறு துண்டாக உடையும். சுயேச்சைக் குழுக்கள் பல உள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியிலும் பல பெரிய குழப்பங்களை காண்கிறோம்.

எங்களில் சிலர் போக வேண்டாம் என்று சொன்ன போது சிலர் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார்கள்.இந்த கட்சியை வலுவாக வைத்திருப்போம், இந்த கட்சி கட்டப்படும் போது நல்ல எதிர்காலம் இருக்கும். எங்களில் 14 பேரில் 5 பேரும் அவ்வழியே சென்றோம்.

Related posts

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடையே சந்திப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய இல்லத்தில் மரணம்!